search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் வெட்டு"

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் வாலிபர் கையை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் அலறி துடித்தார். அவரது இடது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. வலது கையும் பலத்த காயத்துடன் தொங்கியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் அவர் பெருமாள்பட்டை சேர்ந்த பால் தினகரன் (வயது 22) என்பது தெரியவந்தது. மர்ம கும்பல் தன்னை வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டதாக அவர் கூறியுள்ளார்.

    முன்னுக்குப் பின் முரணாக அவர் தகவல் தெரிவித்து வருகிறார். பால் தினகரனின் இடது கையை காணவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள். முன் விரோதத்தில் அவர் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே கொத்தனாருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு அருகே உள்ள குரங்குபுத்தூர் காவிரிகரை தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் வடிவேல்(30). கொத்தனார்.திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் குரங்குபுத்தூர் கடைத்தெருவுக்கு வந்த வடிவேலை அதே பகுதியை சேர்ந்த மைனர் என்ற சந்திரசேகரன். இவரது அண்ணன் முருகேசன், அமிர்தலிங்கம் மகன் தமிழ்செல்வன், ராதகிருஷ்ணன் மகன் பிரபு ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர்.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதை கண்டு தப்பி சென்றனர். வடிவேல் சந்திரசேகரிடம் கொத்தனாராக வேலை செய்துள்ளார். வன்னிய சங்கத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் வடிவேல்மீது ஆத்திரம் கொண்ட சந்திரசேகர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. வடிவேலை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவ மனையிலும், மேல்சிகிச்சைக்காக திருவாருர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×